நஜீப்பின் விடுதலை! அன்வாரின் தோல்வி! RAFIZI RAMLI சாடல்!
- THINAGAREN SANGGAREN
- 18 Sep, 2026
செப்டம்பர் 18,
முன்னாள் பிரதமர் நஜீப் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்படும் மாமன்னரின் முடிவு, ஆட்சியில் இருக்கும் பக்காத்தான் தலைமைக்கான தோல்வி என பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் DATUK SERI RAFIZI RAMLI சாடினார். 1MDB வழக்கு தொடர்பாகச் சர்ச்சைகள் எழுந்த 2015 ஆம் ஆண்டு அன்வார் சிறையில் இருந்தார். அப்போது நஜீப்பிற்கு எதிராகப் போராடியவர்களின் பட்டியலில் அன்வார் இல்லை. நஜீப்பின் விவகாரத்தில் முதல் நாளிலிருந்தே அன்வார் மெத்தனமாகவே இருந்தார் என முன்னாள் அமைச்சருமான DATUK SERI RAFIZI RAMLI குற்றம்சாட்டினார்.
என்னவானாலும் சரி.
இப்போது மீண்டும் பழைய கதைகளைப் பேச முடியாது. ஆனால் நஜீப்பின் வீட்டுக்காவலைக் கண்காணிக்க
வேண்டியது அன்வாரின் பொறுப்பு. அன்வாரின் நேரடி பார்வையில் கடுமையான விதிமுறைகளைப்
பின்பற்றி நஜீப்பின் வீட்டுக் காவல் அமைக்கப்பட வேண்டும் என பெர்சாமா கட்சியின் தலைவருமான
DATUK SERI RAFIZI RAMLI வலியுறுத்தினார். நஜீப்பின் இந்த வீட்டுக் காவல் விவகாரம் தொடர்பாக அன்வார்
வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும் வீட்டுக் காவலுக்கான நடைமுறைகள், நஜீப்பைச் சந்திப்பவர்களுக்குக்
கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அன்வார் வெளிப்படையான ஒரு நிபந்தனைகளை வெளியிட வேண்டும்
என DATUK SERI RAFIZI
RAMLI வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

