நாளை அவசரக் கூட்டத்தை நடத்துகிறதா டி.ஏ.பி? நஜீப்பின் விடுதலையில் டி.ஏ.பி தலைவர்கள் அதிருப்தி!

top-news

செப்டம்பர் 18,

ஒற்றுமை அரசாங்கத்தின் அதிக நாடாளுமன்றங்களைக் கொண்டிருக்கும் டி.ஏ.பி கட்சி நாளை அவசரக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. டி.ஏ.பியின் தேசிய உச்சமன்றப் பொறுப்பாளர்கள் அனைவரும் நாளை பிற்பகல் 3 மணிக்கு டி.ஏ.பி தலைமை செயலகத்தில் ஒன்று கூடவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. நஜீப்பிற்கு வழங்கப்பட்டிருக்கும் பொதுமன்னிப்புக் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடும் டி.ஏ.பி கட்சியின் நிலைப்பாடும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் போதே, பாரிசான்  மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் நஜீப்பின் விடுதலைக்குப் பாரிசான் முழு மூச்சாக வேலை செய்யும் என டி.ஏ.பி தலைவர்கள் பொது மேடைகளில் முழக்கமிட்டனர். அதே போல நெகிரி செம்பிலான் தேர்தலிலும் நஜீப் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால் அது ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் டி.ஏ.பிக்கு மிக பெரிய அவமானம் என டி.ஏ.பி தலைவர்கள் மேடைகளில் தங்கள் பிரச்சாரங்களிலும் பேசி வந்தனர்.

இந்நிலையில் நஜீப்பின் தண்டனைகள் குறைக்கப்பட்டு நஜீப் வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என்கிற மாமன்னரின் அறிக்கை வெளியிடப்பட்டதும் டி.ஏ.பியின் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அதிருப்தி அடைந்ததாகவும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் டி.ஏ.பி தலைவர்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *