நஜீப்பிற்காக நிதி திரட்டும் அம்னோ!

top-news

செப்டம்பர் 18,

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razakக்கு வழங்கப்பட்டிருக்கும் பொதுமன்னிப்பை அம்னோ முழுமையாக வரவேற்பதாகவும் அபராதத் தொகையான 50 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்த அம்னோ தலைமையில் நிதி திரட்டப்படும் என்றும் துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். மாமன்னரின் கருணைக்கு அம்னோ தலைவணங்குகிறது. நமது தலைவர் நஜீப்பிற்காகப் போராடிய அனைத்து அம்னோ சொந்தங்களுக்கும் இந்த பொதுமன்னிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் நஜீப்பின் குடும்பத்தினருக்கு மன நிம்மதியை அளிக்கிறது என்றும் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.

50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்துவதற்காக அம்னோ தலைமையில் திரட்டப்படும் நிதி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi நம்பிக்கை தெரிவித்தார். அம்னோவின் இந்த நிதி திரட்டும் முன்னெடுப்பிற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு அம்னோ உறுப்பினர்களும் பங்களிப்பார்கள் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். மாமன்னரின் இந்த முடிவை நன்றியுடன் வரவேற்கிறோம். அம்னோவின் நீண்ட காலப் போராட்டம் வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *