ஊழல் மன்னன் நஜீப்! மன்னிப்பு வாரியத்தின் கூட்ட குறிப்பு கசிந்தது!

top-news

நவம்பர் 18, 

முன்னாள் பிரதமர் DATUK SERI NAJIB RAZAK க்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு குறித்து பலரும் அந்த கூட்டத்தின் கூட்ட குறிப்பை வெளியிட வலியுறுத்தியும் தற்போது மாமன்னர் SULTAN IBRAHIM, கூட்டரசு அமைச்சர் HANNAH YEO, தலைமை வழக்கறிஞர் ஆகியோர் கலந்து கொண்ட நஜிப்பிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கூட்டத்தின் கூட்ட குறிப்புகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் TONY PUA சமூகவலைத்தில் பகிர்ந்து உள்ளார். 

 அன்றைய நாள் மாமன்னருடன் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் HANNAH YEO உட்பட தலைமை ATTORNEY GENERAL ஆகிய இருவரும் நஜிப்பிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மாமன்னருக்கு விளக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது. வீட்டுக் காவலுக்கான சட்ட வரைவு முழுமையாக இல்லாததால் நஜீப்பின் வீட்டுக்காவலில் குறைகள் ஏற்படும் என தலைமை ATTORNEY GENERAL கூறியதாக வெளியாகியிருக்கும் அந்த கூட்ட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இறுதியாக இந்த விவகாரத்தில் மாமன்னரின் முடிவை ஏற்றுக்கொண்டாலும் தலைமை ATTORNEY GENERAL, கூட்டரசு அமைச்சர் HANNAH YEO இருவரும் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு உள்ள சிறப்பு உரிமையை மதிப்பதால் மாமன்னரின் பொதுமன்னிப்பை அமல்படுத்துவதாக தலைமை ATTORNEY GENERAL தெரிவித்ததாக அந்த கூட்ட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கூட்ட குறிப்பைப் பகிர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் TONY PUA நம் நாட்டின் ஊழல் மன்னருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கும் பொதுமன்னிப்பு அரசின் எதிர்ப்பில் கிடைக்க பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்