நஜீப்பின் மனைவி ஒரு பேய்! Harith Iskander எதிராக ROSMAH வழக்கு!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 15,

மேடை நகைச்சுவைக் கலைஞரான Harith Iskander நஜீப்பின் மனைவி ரோஸ்மாவை PONTIANAK போன்ற உருவம் கொண்டவர் என தெரிவித்த கருத்திற்கு எதிரான நஜீப்பின் மனைவி Datin Seri Rosmah Mansor நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த ஜூன் 9 ஆம் திகதி மலாக்காவில் நடைபெற்ற Harith Iskander: The Outspoken Comedy Tour எனும் மேடை நிகழ்ச்சியில் தனது புகைப்படத்தைக் காண்பிக்கும் முன்னர் Harith Iskander கோரமான ஒரு பேயின் புகைப்படத்தைக் காண்பித்து, அதுடன் தன் புகைப்படத்தையும் ஒப்பிட்டு காண்பித்ததாக  நஜீப்பின் மனைவி Datin Seri Rosmah Mansor குற்றம் சாட்டினார்.

முன்னாள் பிரதமரின் மனைவி எனும் தன்னுடைய நற்பெயரையும்
, புகழையும் கெடுக்கும் நோக்கத்தில் Harith Iskander இவ்வாறு செய்ததாகவும் தன் உடலை இழிவுப்படுத்தும் வகையில் மேடை நிகழ்ச்சியில் Harith Iskander செயல்பட்டதாகவும் நஜீப்பின் மனைவி Datin Seri Rosmah Mansor உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 31 விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *