நஜீப்பிற்கு ஆதரவாக அம்னோ இருக்கும்! – ZAHID நம்பிக்கை!

top-news
FREE WEBSITE AD

முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாக அம்னோவும் பாரிசான் உறுப்புக் கட்சிகளும் இருக்கும் என அம்னோ தலைவரும் பாரிசான் தலைவருமான ZAHID HAMIDI நம்பிக்கை அளித்தார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமரும் பாரிசானை வலுப்படுத்திய முக்கிய தலைவர்களில் நஜீப்பும் ஒருவர்.

நஜீப் ஓர் அம்னோக்காரராக மட்டும் அறியப்படவில்லை, அவர் ஒரு சமத்துவவாதியாகவும் வாழ்ந்தவர். ஒரு சிலரின் தவறான வழிகாட்டலில் முதலீடுகளில் குறை இருந்தாலும் அவரின் நல்லாட்சியை மக்களும் தலைவர்களும் இன்றும் மறக்காமல் இருப்பதாக ZAHID தெரிவித்தார். தற்போது வழக்குகளை எதிர்நோக்கி இருக்கும் நஜீப்பின் வீட்டுச் சிறைக்கான முன்னெடுப்புகளில் அம்னோ தீவிரமாகச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *