விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’: முதலமைச்சர் விஜய் வழங்கினார்
- Surendran Sumdraraj
- 27 Aug, 2026
சென்னை: உயிர்ம வேளாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மூன்று விவசாயிகளுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்களுக்கான ‘நம்மாழ்வார் விருது’ வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செ. நல்லசிவம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ. சுப்பிரமணியன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா ஆகியோர் இந்த ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டது.
உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பங்களிப்பை போற்றுவதோடு, இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



