படப்பிடிப்பில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்குக் காயம்: உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்

top-news
FREE WEBSITE AD

ஆந்திரப் பிரதேசம், ஜூலை 22-

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, தனது புதிய திரைப்படமான ‘என்பிகே111’ (NBK111) படப்பிடிப்பின்போது காயமடைந்தார். ஆந்திரப் பிரதேசம் காகிநாடாவில் நடைபெற்ற ஆக்‌ஷன் காட்சியின் படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது பாலகிருஷ்ணா தவறி விழுந்ததாகவும், இதனால் அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட நிலையில், பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *