18 வயதுக்குட்பட்ட இளையோர் ஹாக்கி அணி அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 14-

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் முகமட் சூபியான் முகமட் சீனாவின் டாஜோவில் நடைபெற்ற ஆசிய இளையோர் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானிடம் 3-4 என்ற கணக்கில் பெனால்டியில் தோல்வியடைந்த போதிலும், தனது வீரர்களின் போராட்ட உணர்வை பாராட்டினார். முழு நேர ஆட்டம் 3-3 என சமநிலையில் முடிந்த பிறகு, இந்த பரபரப்பான போட்டி பெனால்டிக்குச் சென்றது.

சூபியான், இந்தத் தோல்வியால் ஏமாற்றமடைந்தாலும். இந்தப் போட்டி அணியின் இந்தத் தொடரில் சிறந்த ஆட்டமாக இருந்ததாகக் கூறினார். எங்களுக்கு இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், வீரர்கள் முழு அர்ப்பணிப்புடனும் உயர்ந்த போராட்ட உணர்வுடனும் விளையாடினர். ஆரம்பத்தில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்தும், அவர்கள் அசாதாரணமாக மீண்டு வந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் 3-0 என முன்னிலை பெற்றது. ஆனால் மலேசிய வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, மூன்று கோல்களை அடித்து ஆட்டத்தைச் சமநிலைப்படுத்தினர். பெனால்டியில், பாகிஸ்தானின் துல்லியமான ஆட்டம் அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இந்த அனுபவம் எங்களுக்கு முக்கியமான பாடங்களை அளித்துள்ளது. அடுத்து. மூன்றாம் இடத்திற்கான போட்டியில் வெற்றி பெறுவதற்கு முழு முயற்சி செய்வோம் என்று சூபியான் கூறினார்.

மலேசிய ஹாக்கி சம்மேளனம் இந்த அணியை ஆதரித்து, இளம் வீரர்களுக்கு உயர்தர பயிற்சி வழங்கி வருகிறது. இந்தத் தோல்வி, மலேசிய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தாலும், அணியின் உறுதியும் திறமையும் அவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *