இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளுமா!

top-news

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கடந்த 1998ம் ஆண்டில் வெளியான படம் இந்தியன். லஞ்சம், ஊழல் நாட்டில் பெருகிய சூழலில், ஆத்திரமடையும் சுதந்திர போராளி சேனாபதி, கத்தியை எடுப்பதுதான் இந்தியன் படத்தின் மையக்கரு.

இறுதியில் கமலின் மகனே, அந்த குற்றத்தை செய்ய மகனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்று குத்திக் கொலை செய்கிறார் இந்தியன் தாத்தா.

அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் நடிப்பில் அதகளம் செய்த படம், 3வது முறையாக தேசிய விருதை பெற்றுத் தந்தது. சுகன்யா, கஸ்தூரி, ஊர்மிளா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி செந்தில், நெடுமுடி வேணு, நிழல்கள் ரவி முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைரக்டர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி உள்ளார். இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, கஜோல் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தியன் 2 படம், வரும் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இசை வௌியீட்டு விழாவும் நடக்க உள்ளது.

இந்தியன் 2 படத்தை எடுக்கும்போதே, இந்தியன் 3 படத்தையும் எடுத்து முடித்துவிட்டார் இயக்குனர் ஷங்கர். ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல, 3வது பாகமாக எடுக்கப்பட்ட இந்தியன் 3 படம், வரும் 2025ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் படத்தை பொருத்த வரை லஞ்சம், ஊழலை தட்டிக் கேட்கும் முதியவராக, வர்மக்கலை தெரிந்த 70 வயது சேனாபதி கேரக்டரில் கமல் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் இப்போது நடித்திருப்பது இன்றைய 2கே ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதுவுமின்றி இப்போதும் அந்த கதைக்கரு ரசிகர்களை ஏற்பார்களா என்றும் சந்தேகம் ஏற்பட்டது.

அதற்கேற்ப கதையில் சில மாற்றங்களை செய்து, இப்போதைய டிரண்டிங்குக்கு ஏற்ப திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்தியன் 2 படத்தில் நாட்டில் நடக்கும் ஊழல், லஞ்சம், அநீதிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிடுகிறார் சித்தார்த். ஒரு கட்டத்தில் அதனால் ஏகப்பட்ட துன்பங்களில் சித்தார்த் சிக்கிக் கொள்கிறார். அப்போது அவரை காப்பாற்றவும், பாதுகாக்கவும் கத்தியுடன் மீண்டும் களத்தில் குதிக்கிறார் இந்தியன் தாத்தா. இதுதான் இந்தியன் 2 படத்தின் கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *