இந்தியப் பெற்றோர்கள் தயங்காமல் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

தி.ஆர்.மேத்தியூஸ்

புக்கிட் மெர்தாஜம், அக். 17-

நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய கல்வி மட்டுமே முக்கிய ஆயுதமாக திகழ்ந்து வருவதால்,அதனை எதிர்க்கொள்வதற்கும் போராடுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டுமென பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வர் ஜக்டிப் சிங்கின் சிறப்பு உதவியாளர் டத்தோ இராமச்சந்திரன் முத்தையா கேட்டுக் கொண்டார்.

இதில் நமது தாய் மொழியான தமிழும் முக்கியமாக திகழ்கின்றது.இன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியிலும், தேசிய ரீதியிலும் பல்வேறு துறைகளில் பெருமைப்படக்கூடிய வகையில் பல சாதனைகளைப் படைத்து வருவது, தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். அந்த வகையில் பினாங்கு மாநில பக்காத்தான் அரசாங்கத்தின் உதவி, அதன் வற்றாத ஆதரவுடன் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இதனையும் கருத்தில் கொண்டு இந்தியப் பெற்றோர்கள் தயங்காமல் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி,நமது தாய் மொழியின் பெருமையையும்,சிறப்பையும் வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

மத்திய செபராங் பிறை,புக்கிட் மெர்தாஜம் அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளி பாலர் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி உபகரணங்கள் வழங்கிய நிகழ்வில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டு அவர் இவ்வாறு உரையாற்றினார். இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதன்மை சமூகநல சங்கத்தின் தலைவர் அழகேசன் ஐயாரு, பள்ளியின் பொறுப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *