இந்திய மாணவர்கள் கல்வியில் பின்தங்கா வேண்டி உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும்!
- Muthu Kumar
- 13 Oct, 2024
(இரா. கோபி)
கோலாலம்பூர், அக். 13-
இந்திய மாணவர்கள் கல்வியில் பின்தங்கவிடக் கூடாது. அவர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று துணைப்பிரதமரின் இந்திய நலன் பிரிவு சிறப்பு அதிகாரி அர்விந் அப்பளசாமி தெரிவித்தார்.
உயர் கல்வி தொடர்பில் பி40 பிரிவைச் சேர்ந்த பலர் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக கல்விக் கட்டணம் உள்ளிட்ட கற்றல், கற்பித்தலுக்கு தேவையான இலக்கியல் உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று அர்விந் தெரிவித்தார். டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட்ஹமிடியின் ஆலோசனையின்படி இது வரையில் 200க்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவிகளை செய்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
சுமார் இரண்டு மாதமாக உயர் கல்வியில் படிக்கும் மாணவர்களில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி வருவதாக தெரிவித்தார்.நான் ஒரு காலகட்டத்தில் படிக்கும் போது எவ்வளவோ கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளேன்.அதில் கல்விக்கு பணம் கட்ட முடியாமல் இருந்துள்ளேன். என் தம்பி தங்கைகள் கல்வி பயில்வதற்கு கஷ்டப்படாமல் இருப்பதற்கு நான் உதவி வருகிறேன்.
ஒவ்வொரு மாணவரின் வலி என்ன என்பதனை என்னால் உணர முடியும் என்று அவர் தெரிவித்தார்.நேற்று முன்தினம் ஒரு சந்திப்பில் 7 மாணவர்களுக்கு கணிசமான தொகைகளை வழங்கி அவர்களை அர்விந் பாராட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *