புதிய தலைமைச் செயலகத்தை எந்த ஆட்சியும் தடுக்க முடியாத வகையில் சட்டம் வேண்டும் – பிரேமலதா யோசனை
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
சென்னை, செப். 4 –
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் விஜயின் அறிவிப்பை வரவேற்ற தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், எதிர்காலத்தில் எந்த ஆட்சி வந்தாலும் அந்தத் திட்டத்தை தடை செய்ய முடியாத வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தீர்மானம் மற்றும் பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அப்போது, விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றும், அவை விரைவில் செயல் வடிவம் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களிடம் தமிழ் வாசிப்பு மற்றும் பேச்சுத் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



