‘மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்’ – சரத்குமார் கருத்து

top-news
FREE WEBSITE AD

தமிழ் நாடு, ஜூலை 25-

நீட் தேர்வு மாணவர்களின் திறமையை ஒரே அளவுகோலில் மதிப்பிடும் முக்கியமான நுழைவுத் தேர்வாக இருப்பதால், அது தொடர வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மருத்துவக் கல்வியில் தரத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய நீட் தேர்வு அவசியம் எனக் கூறினார்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது சரியான தீர்வாக இருக்காது என்றும், அதற்கு பதிலாக தேர்வு நடத்தும் முறையை மேலும் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆனால், அதற்காக தேர்வு முறையையே கைவிடக் கூடாது என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *