ஊழல் மீது வெறுப்பு வேண்டும்! இளைஞர்களுக்கு அன்வார் அறிவுரை

top-news

புத்ராஜெயா, அக் 2: பட்டமோ அல்லது முனைவர் பட்டமோ (PhD) வைத்திருப்பது ஒருவரை ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தடுத்துவிடாது என்பதை, இளைஞர்களுக்கும், குறிப்பாக 'ஜென் இசட்' (Gen Z) தலைமுறையினருக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிம் நினைவூட்டினார்.

எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் கல்வித் திறனில் சிறந்து விளங்க பாடுபடுவதுடன், எதிர்காலத்தில் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாத வகையில் நல்ல குணநலன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

1MDB ஊழல் விவகாரத்தின் மையத்தில் இருந்தவர்கள் அல்லது ஃபெல்டா (Felda) மற்றும் தபுங் ஹாஜி (Tabung Haji) தொடர்பான சர்ச்சைகளில் தொடர்புடையவர்களில் சிலர் உயர் கல்வி கற்றவர்கள் என்பதை அன்வார் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக, இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் அல்ல. ஏறக்குறைய அனைவரும் பட்டதாரிகள்; அவர்களில் சிலரிடம் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் உள்ளன.

எனவே, சிறந்த கல்வி ஒருவரை நல்லொழுக்கம் மிக்கவராக மாற்றிவிடாதுஎன்று நேற்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் ஆளுமை விருதுகள் (ATSN) வழங்கும் விழாவில் அவர் கூறினார்.

மற்றவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் விருப்பமும், ஊழல் மீதான வெறுப்பும் இளம் வயதிலேயே வளர்க்கப்பட வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

மேலும், வறுமை, இனங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்ற விவகாரங்களைப் புரிந்துகொள்ளுமாறும் பல்கலைக்கழக மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *