அரசாங்கம் கவிழும் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி! - அன்வார் விளக்கம்

top-news

கோலாலம்பூர், நவ 17: மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து நிலையாகச் செயல்பட்டு வருவதாகவும், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று இதுவரை எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மலேசிய ஊடகங்களிடம் பேசிய அவர், தேர்தல் பிரசாரங்களின்போது அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடாகக் கருதக்கூடாது என்றார்.

அமைச்சரவையில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இருந்தாலும், முக்கியமான கொள்கை முடிவுகளில் ஒருமித்த கருத்துடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தோணி லோக்கின் அமைச்சர் பதவி விலகல் குறித்துப் பேசிய அன்வார், அவரது முடிவை மதிப்பதாகவும், அரசாங்கத்துக்கான ஆதரவை அவர் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்