நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,280-ஐ கடந்தது – 5,620 பேரின் கதி தெரியவில்லை

top-news
FREE WEBSITE AD

காத்மாண்டு, செப். 4 –

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,280-ஐ கடந்துள்ளது. மேலும், தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உட்பட 5,620-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இமயமலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததை தொடர்ந்து போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம், மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தின் பல பகுதிகளை கடுமையாக சேதப்படுத்தியது.

வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட சேறு, சகதி மற்றும் பாறைகள் காரணமாக சாலைகள், பாலங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் அழிந்தன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வெள்ளத்தில் சிக்கினர்.

இதுவரை 1,280 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பல உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *