நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக உயர்வு – இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் கதி தெரியவில்லை
- Surendran Sumdraraj
- 01 Sep, 2026
காத்மாண்டு, செப். 1 –
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது. பேரிடர் நிகழ்ந்து 6 நாட்களாகியும் இந்தியர்கள் உள்பட சுமார் 4,500 பேரின் நிலை என்ன என்பது தெரியாமல் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் உற்பத்தியாகி தெற்கு நோக்கிப் பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. சாலைகள், பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் வெள்ளத்தில் சேதமடைந்தன.
ஆற்றங்கரையோர நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.
மீட்புப் பணிகளில் இதுவரை 9,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தியா, சீனா, ரஷியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இதில் அடங்குவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



