நேபாளத்தில் பெருவெள்ளம்: உத்தரபிரதேசம், பீகாரில் கடும் உஷார் நிலை
- Surendran Sumdraraj
- 27 Aug, 2026
புதுடெல்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் நேபாள எல்லைப் பகுதிகளில் கடும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லையில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நேபாளத்தின் திரிசூலி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம், இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் வழியாக பாயும் கண்டக் ஆற்றிலும் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நேபாளத்தை ஒட்டியுள்ள உத்தரபிரதேசம் மற்றும் பீகார் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கண்டக் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு அல்லது வேறு ஏதேனும் எதிர்பாராத பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 20 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அவசர நிலை மேலும் மோசமடைந்தால் பயன்படுத்துவதற்காக கூடுதல் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



