நேபாள பெருவெள்ளம்: 4,858 பேரின் கதி என்ன? – மீட்புப் பணி தீவிரம்
- Surendran Sumdraraj
- 03 Sep, 2026
காத்மாண்டு, செப். 3 –
நேபாளத்தின் போடேகோஷி ஆற்றில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இமயமலையிலிருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், சேறு மற்றும் சகதி காரணமாக சுமார் 8 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
கிராமங்கள் மற்றும் நகரங்கள் என ஆற்றின் போக்கில் இருந்த பல பகுதிகள் சேற்றால் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்புப் பணிகளின்போது இதுவரை 1,222 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்த நிலையில் இருப்பதால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் 95 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளத்தில் சிக்கியிருந்த 6,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



