கிள்ளானில் கண்டெய்னரால் நசுக்கப்பட்டு ஒருவர் பலி!
- Shan Siva
- 21 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 21: நேற்று கிள்ளான் வடக்கு துறைமுகத்தில் கண்டெய்னரால் நசுக்கப்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை 8.26
மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அல்ஹாபிஸ் அப்துல் ரசாக் எனும் 34 வயது
ஆடவர் தலையில் பலத்த
காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு துறைமுக நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்ததாக
அவரது சகோதரர் ரஃபி அப்துல் ரஜாக் தெரிவித்தார்.
மூன்று
உடன்பிறப்புகளில் மூத்தவரான அல்ஹாஃபிஸ் நான்கு மாத குழந்தைக்குத் தந்தை ஆவார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *