விஜய்யுடன் கூட்டணி என நான் சொல்லவே இல்லை - டிடிவி தினகரன்!

top-news
FREE WEBSITE AD

2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி, தமிழ் அரசியலில் விறுவிறுப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் புதிய அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அமமுகவும் அந்த கூட்டணியில் இணையப்போவதாக தகவல்கள் பரவின. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டிடிவி தினகரனும், "விஜய் தலைமையில் உருவாகும் கூட்டணியில் நாங்களும் இருப்போம்" என பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அதற்கான தெளிவை டிடிவி தினகரனே நேரில் வழங்கியுள்ளார். அவர், "விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என்று சொன்னேன். ஆனால் விஜய்யுடன் நேரடியாக கூட்டணியில் சேருவோம் என்று நான் கூறவில்லை" என விளக்கமளித்துள்ளார்.

மேலும், "விஜய்யை கூட்டணிக்கு வாங்க வாங்க, எடப்பாடி பழனிசாமி கூவி கூவி அழைக்கிறார்" என சுட்டிக்காட்டியதும் குறிப்பிடத்தக்கது. இந்த விளக்கமின்மையும், தொடர்ந்து கருத்துகள் மாறுவதும் தமிழக அரசியலில் குழப்பத்தையும், பரபரப்பையும் உருவாக்கி வருகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *