ஆப்பிரிக்காவில் புதிய குரங்கு இனம் கண்டுபிடிப்பு

top-news
FREE WEBSITE AD

கின்ஷாசா, ஜூலை 17:

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் அடர்ந்த மழைக்காடுகளில், ஆரஞ்சு நிற உதடுகள் மற்றும் தனித்துவமான குரல் ஒலியைக் கொண்ட புதிய வகை குரங்கு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் குரங்குக்கு அறிவியல் ரீதியாக ‘கொலோபஸ் காங்கோயென்சிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் இதனை ‘லிக்வேலி’ என அழைக்கின்றனர்.

கருப்பு நிறத்தில் பளபளப்பான உடல் முடி, வாயைச் சுற்றிய இளஞ்சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறப் பகுதி, நீண்ட வால், பெரிய காதுகள் மற்றும் வாலுக்கு அருகிலுள்ள வெளிர் நிற அடையாளங்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். சுமார் 15 பவுண்டுகள் எடைகொண்ட இந்தக் குரங்கு, மற்ற கொலோபஸ் குரங்கு இனங்களைவிட உருவத்தில் சிறியதாகக் காணப்படுகிறது.

இந்தக் குரங்கின் முதல் தெளிவற்ற படம் 2008ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு மீண்டும் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர். 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை சுமார் 1,700 சதுர கிலோமீட்டர் பரப்பில் 114 முறை இந்தக் குரங்குகள் காணப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் அமைப்பு, குரல் ஒலி மற்றும் மரபணு தொடர்பான டிஎன்ஏ பரிசோதனைகளுக்குப் பிறகு, இது தனித்துவமான புதிய குரங்கு இனம் என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த 75 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் அறிவியல் ரீதியாக அடையாளம் காணப்பட்ட ஐந்தாவது புதிய குரங்கு இனம் இதுவாகும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *