‘ஜெயிலர் 2’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு – இணையத்தில் வைரல்
- Surendran Sumdraraj
- 02 Sep, 2026
சென்னை, செப். 2 –
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினியின் மாஸ் தோற்றத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். உலகளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்பட்டது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ உருவாகியுள்ளது. இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



