பகத் பாசிலின் “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 01 Sep, 2026
சென்னை, செப். 1 –
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் நடித்துள்ள புதிய திரைப்படம் “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.
இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். மாயாஜாலம் கலந்த கற்பனை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பகத் பாசில் மேஜிக் கலைஞராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பகத் பாசிலுடன் குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான பயணத்தை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே “புஷ்பா” திரைப்படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார்.
படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



