அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, கிரீன் கார்டு, வேலை அனுமதி, விசா உள்ளிட்ட குடியேற்ற நலன்களுக்காக விண்ணப்பிப்போர் அனைத்து ஆவணங்களையும் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேவையான தகவல்கள் அல்லது ஆதார ஆவணங்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்கள், கூடுதல் விளக்கம் கோராமல் நேரடியாக நிராகரிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, விண்ணப்பங்களில் குறைபாடுகள் இருந்தால் கூடுதல் தகவல்களைச் சமர்ப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய நடைமுறையின் கீழ், ஆரம்பத்திலேயே முழுமையான மற்றும் துல்லியமான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்தவும், நிலுவை கோப்புகளின் எண்ணிக்கையை குறைக்கவும் உதவும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *