புதிய வடிவில் இளைஞர் நாடாளுமன்றம்! – சபாநாயகர் அறிவிப்பு
- Shan Siva
- 08 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 8: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் நடைபெறும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.
சில மாற்றங்களோடு
ஒரு புதிய வடிவமாய் தற்போதைய நடைமுறை இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது, 100 பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதில் இருந்து
222 ஆக விரிவாக்குவது எப்படி என்பது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும், ிது தொடர்பாக பல்கலைக்கழகங்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும்
அவர் கூறினார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற
கட்டிடத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது மலேசிய நாடாளுமன்ற கருத்தரங்கை திறந்து
வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இளைய
தலைமுறையினர் அரசியலுக்கு வருவதற்கு இளைஞர் பாராளுமன்றம் ஒரு "லாஞ்ச்
பேட்" என்று ஜோஹாரி கூறினார்.
இது ஒரு பயிற்சி
பள்ளியாக இருக்கும் என்று தாங்கள் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.
அரசியல் கட்சிகளும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் மற்றும் எதிர்கால தலைவர்களை வடிவமைக்க பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *