மலேசிய ரயில்வே துறையில் புதிய அடையாளம்!
- Muthu Kumar
- 18 Jul, 2025
கோலாலம்பூர்,ஜூலை.18-
மலேசிய ரயில்வே நிறுவனம் Keretapi Tanah Melayu Berhad, தனது டிஜிட்டல் பரிணாம முயற்சிக்குள் புதிய புரட்சியை கொண்டு வந்துள்ளது. இப்போது KTMB, KITS Style எனப்படும் மலேசியாவின் முதல் ரயில்வே அடிப்படையிலான டிஜிட்டல் லைஃப்ஸ்டைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ASEAN பிராந்தியத்தில் Mobility-as-a-Service (MaaS) முன்னணிக்கு கொண்டுசெல்லும் முயற்சியாகும்.
KITS Style Mastercard-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம். KTMB நிறுவனமாக ASEAN பகுதியில் இந்த வசதியை வழங்கும் முதல் ரயில்வே ஆபரேட்டராக திகழ்கிறது. விரைவில், இந்த கார்டு மலேசியாவின் பல்வேறு போக்குவரத்து சேவைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்படும். தற்போது மொபைல் செயலியில் கிடைக்கக்கூடிய இந்த கார்டு, 2025 செப்டம்பரில் கிடைக்கும்.
KTMB, Capital A D Mastercard நிறுவனங்களுடன் MoU கையெழுத்திட்டு, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பான பணமாற்றங்களை மேம்படுத்தியுள்ளது. AirAsia Rewards மற்றும் Rail Rewards இடையே சலுகைகள் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு பயணிகளுக்குக் கிடைக்கும்.
போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்ததாவது,"KITS Style செயலி. மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதார நோக்கங்களை ஆதரிக்கிறது. இது ரயில்வே துறையை டிஜிட்டல் யுகத்துக்குள் இழுத்துச்செல்லும் முன்னோடியான முயற்சி. என்றார். அறிமுக விழாவில் அமைச்சர்கள், KTMB தலைமை நிர்வாகிகள், Mastercard, AirAsia Lo ManagePay Systems Berhad நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



