ரோஸ்மாவின் வழக்கை புதிய நீதிபதி விசாரிப்பார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 21-

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரிடமிருந்து முப்பத்து நான்கு கோடியே அறுபது லட்சம் அமெரிக்க டாலர் கோரி 1எம்டிபி நிறுவனம் தொடுத்துள்ள வழக்கை புதிய நீதிபதி ஒருவர் செவிமடுப்பார். ஆடம்பரப் பொருட்களைக் கொள்முதல் செய்ய அப்பணத்தை அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கை நீதித்துறை ஆணையர் லியோங் வாய் ஹோங் விசாரிக்கவிருந்தார்.

ஆனால், அந்த வழக்கைச் செவிமடுப்பதின்றும் லியோங் விலகிக் கொள்ள வேண்டும் என்று ரோஸ்மா விண்ணப்பம் செய்திருந்தார். அதனை லியோங் ஏற்றுக் கொண்டார். 1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான அப்பணத்தை ரோஸ்மா திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று நிறுவனமும் அதன் ஒன்பது துணை நிறுவனங்களும் அவர் மீது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளன.அப்பணத்தைக் கொண்டு நகைகள், கைக்கடிகாரங்கள்,கைப்பைகள் போன்ற ஆடம்பரப் பொருட்களை அவர் வாங்கியதாக வழக்கு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *