PERIKATAN வெற்றிக்கு பாஸ் கட்சி பொறுப்பு! - Hadi Awang சூளுரை!
- Thina S
- 10 May, 2024
Kuala kubu baru இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் வேட்பாளரை நிறுத்தாமல் பெர்சத்துக் கட்சியின் வேட்பாளரை நிறுத்தியதால் பாஸ் கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக எழுந்த சர்ச்சையில் உண்மை இல்லை என பாஸ் கட்சி தலைவர் Tan Sri Abdul Hadi Awang நேற்று விளக்கமளித்தார்.
கடந்த சட்டமன்றத்தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிட்ட தொகுதியாக Kuala kubu baru இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் தலைமையின் முடிவைப் பாஸ் கட்சி மதிப்பதாகவும் பெரிக்காத்தான் வெற்றியை உறுதி செய்ய பாஸ் கட்சி தூணாக இருக்கும் என முதல் முறையாக Kuala kubu baru தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பாஸ் கட்சி தலைவர் Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார்.
பெரிக்காத்தான் கூட்டணியின் வெற்றிக்காகப் பாஸ் கட்சி களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் என பாஸ் கட்சி தலைவர் Tan Sri Abdul Hadi Awang நம்பிக்கை அளித்தார்!
கடந்த 12 நாள்களாகப் பெரிக்காத்தான் Kuala kubu baruவில் நடத்திய பிரச்சாரங்களில் பாஸ் கட்சியினர் வெளிப்படையாகப் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *