இடைத்தேர்தல் வெற்றி! சேவையைத் துரிதப்படுத்துங்கள்! – ANWAR அறிவுரை!

top-news

Kuala Kubu Baharu இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் Pang Sock Tao 3,869 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் இந்த இடைத்தேர்தல் பக்காத்தானுக்குப் படிப்பினைகளைக் கற்பித்துள்ளது என பிரதமரும் பக்காத்தான் கூட்டணியின் தலைவருமான அன்வார் நேற்று செந்தூலில் நடந்த PKR  கட்சியின் 25 ஆண்டுகள் நிறைவு விழா விருந்துபசரிப்பில் தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளருடன் கட்சி உறுப்பினர்களும் மக்களை நேரடியாகச் சந்தித்தது போல, தொடர்ந்து மக்களைச் சந்திக்கும் போக்கைக் கடைப்பிடியுங்கள் என அன்வார் வலியுறுத்தினார். மக்களுக்காக மக்களுடனான அரசியலை முன்னெடுப்பதே பக்காத்தானின் அரசியல் கொள்கை. ஆட்சியில் அமர்ந்ததும் மக்களுடன் மக்களாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என பிரதமரும் பக்காத்தான் கூட்டணியின் தலைவருமான அன்வார் நேற்று செந்தூலில் நடந்த PKR  கட்சியின் 25 ஆண்டுகள் நிறைவு விழா விருந்துபசரிப்பில் அறிவுருத்தினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *