ஒற்றுமை அரசாங்கத்திற்கு MCA வேண்டுமா? அம்னோ கேள்வி.

top-news

பாரிசானுடன் MCA தொடர்ந்து பயணிக்குமா என்பதை MCA கட்சியே முடிவெடுக்கட்டும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Lokman Noor Adam மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 24, கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் அங்கம் பெற்றிருக்கும் நிலையில் பாரிசானின் கூட்டணிக் கட்சியான MCA வேண்டுமா எனும் கேள்வியை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Lokman Noor Adam முன் வைத்தார். 

அரசியலில் கொடுப்பதும் பெறுவதும் என இரு வழி ஆதயம் இருக்க வேண்டும். Kuala Kubu Bahru இடைத்தேர்தலில் ஒற்றுமை கூட்டணியின் வேட்பாளரை MCA ஆதரிக்காமல் நிராகரித்தது முறையல்ல என்றும் தற்போது ஒற்றுமை கூட்டணி Kuala Kubu Bahru இடைத்தேர்தலில் வெற்றி பெற்றும் MCA வாழ்த்து கூட பகிராமல் இருப்பது அரசியல் முதிர்ச்சியற்ற செயல் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Lokman Noor Adam தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *