விபத்தில் சிக்கிய விளையாட்டாளரைச் சந்தித்த துணை அமைச்சர் Adam Adli!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் Eastern Dispersal Link சாலையில் ஏற்பட்ட விபத்தில் 22 வயதான தேசிய தடகள் வீரரான Siti Nurul Masyitah Elias படுகாயம் அடைந்தை அறிந்த இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் Adam Adli Abd Halim நேரில் சென்று அவரையும் அவர் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அவர் முழுமையாக நலம்பெற சிகிச்சைக்கான செலவுகளையும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஏற்பதாகவும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

மேலும் இவ்விபத்தால் Politeknik Ibrahim Sultan உயர்கல்விக் கூடத்தில் தேர்வு எழுத முடியாமல் போனதாக Siti Nurul Masyitah Elias தெரிவித்ததும் சம்மந்தப்பட்ட உயர்கல்வியிடம் Adam Adli முறையீடு செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் பயிற்சிக்குப் பின் வீட்டுக்குத் திரும்பும் வழியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜோகூர் பாரு தெற்கு காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் Raub Selamat உறுதிப்படுத்தினார்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட 2 வயதான தேசிய தடகள் வீரரான Siti Nurul Masyitah Elias வலது தோள்பட்டை, இடுப்பு எலும்பு மற்றும் கால் எலும்புகள் முறிவடைந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *