இங்கிலாந்து பிரிமியர் லீக்:அர்செனல் வெற்றி!

top-news

லண்டன், ஜன.3-

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.கெட்ஜ் கமுனிட்டி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பிரின்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.அர்செனல் அணியின் வெற்றி கோல்களை கேப்ரியல் ஜேசுஸ், மைக்கல் மெரினோ, கேப்ரியல் மார்டின்ஸ் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 39 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தனர். முதலிடத்தில் லிவர்பூல் அணியினர் 45 புள்ளிகளுடன் உள்ளனர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *