நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல்; 24 பேர் பலி
- Surendran Sumdraraj
- 20 Aug, 2026
அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதக்குழுவினர் நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் பிளேட்டா மாகாணத்தில் உள்ள மன்கு நகருக்கு அருகே பின்பர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த பொதுமக்களைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டதுடன், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களாலும் அவர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே அல்லது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



