நைஜீரியாவில் மர்ம ஆயுதக் கும்பல் துப்பாக்கிச் சூடு: 30 பேர் உயிரிழப்பு

top-news
FREE WEBSITE AD

அபுஜா, ஜூலை 28-

நைஜீரியாவின் வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள நரிடோன் கிராமத்தில் மர்ம ஆயுதக் கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு அருகில் கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள், பொதுமக்களைக் குறிவைத்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் பல வீடுகளுக்குத் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களும் அடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், வடமேற்கு மற்றும் வடமத்திய நைஜீரியாவில் செயல்பட்டு வரும் ஆயுதக் கும்பல்கள் மற்றும் கொள்ளையர் குழுக்கள் இதுபோன்ற தாக்குதல்களை அடிக்கடி நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *