பாகிஸ்தானில் இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல்: 9 வீரர்கள் பலி

top-news

லாகூர், செப். 30 –

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்குப் பலூசிஸ்தான் விடுதலை முன்னணி பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் மற்றும் கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு தொடர்புடைய இலக்குகள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பலூசிஸ்தான் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்கள் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை தங்களது பெண்கள் பிரிவான ‘கரீமா ஆயுதப் பிரிவு’ நடத்தியதாக பலூசிஸ்தான் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *