ஆன்லைன் ஸ்கேம் மோசடி 6 லட்சம் வெள்ளிக்கும் மேல் இழப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6: 600,000 வெள்ளிக்கும்  அதிகமான இழப்புகளை ஏற்படுத்திய வேலை மோசடி சிண்டிகேட் தொடர்பாக மொத்தம் 19 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர்  டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப்  தெரிவித்துள்ளார்.க்

lynxoasis.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலியான வேலை வாய்ப்புகளை விளம் ஹ் பு பரப்படுத்தி இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை, வேலை மோசடியில் 688,099 வெள்ளி  இழப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் 19 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ஹோட்டல் முன்பதிவு முகவராக முதலில் வேலைகளை வழங்கும்  சம்பந்தப்பட்ட சிண்டிகேட்.  இணையதளத்தில் கணக்கைத் திறந்து ஹோட்டல் முன்பதிவு பணிகளை முடிக்கச் சொல்வார்கள்.  இதற்கு முதலில் பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட பணத்தைச் செலுத்த பணிக்கப்படுவார்கள். பின்னர் கமிஷன் கிடைix்கும் என்று உத்தராவதம் வழங்கப்படும்.  அப்படி பணம் செலுத்திய பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.

எனவே பொதுமக்கள் விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *