தஞ்சோங் ரம்புத்தானில் ஓர் இந்தோனேசிய பெண் மற்றும் அவரின் 2 பிள்ளைகளை காணவில்லை!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, செப்.30-

தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள ஒரு வீட்டிலிருந்து ஓர் இந்தோனேசிய பெண்ணும் அவரின் 2 பிள்ளைகளும் கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணாமல் போய் விட்டார்கள். அன்றைய தினத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் எர்னாவாத்தி ராஜாகுக்குக், (வயது 36) என்ற அப்பெண் காணாமல் போய் விட்டார் என்பதை அவரது முன்னாள் கணவர் இரவு 8.30 மணிக்கு உணர்ந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அகமட் தெரிவித்தார்.

இவரின் 2 பிள்ளைகளான ஃபாரிஷா ஜன் முகமட் என்ற மகள் (வயது 9) மற்றும் ஃபிராஸ் கான் (வயது 5) என்ற மகனும் காணாமல் போய் விட்டதாகவும் புகார் செய்யப்பட்டது. ஆகையால் இச்சம்பவம் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக ஓர் அறிக்கையில் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அகமட் குறிப்பிட்டார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *