ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? – டிரம்ப் பதில்
- Surendran Sumdraraj
- 27 Aug, 2026
வாஷிங்டன்: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிரிழந்ததாகத் தாம் கருதவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பதவியேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் அவர் பொதுவெளியில் அதிகம் தோன்றாததால், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பேசிய டிரம்ப், “மொஜ்தபா கமேனி உயிரிழந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் கடுமையாகக் காயமடைந்திருக்கலாம். அவரது உடலின் இடது பகுதி, முழங்கை மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்,” என்று தெரிவித்தார்.
மேலும், “அவர் உண்மையில் உயிருடன் இல்லை என்றால், ஈரான் மிகப்பெரிய நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது,” என்றும் டிரம்ப் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



