மத அடிப்படைவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது: சபாநாயகருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 17-

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மத அடிப்படையிலான பிற்போக்கான கருத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் நடைபெற்ற 5-ஆவது “மார்ச் ஃபார் லைஃப்” நிகழ்ச்சியில் சபாநாயகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை இல்லை என்றும், ஒவ்வொரு குழந்தையும் கடவுள் வழங்கிய பரிசு என்றும் சபாநாயகர் பேசியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய கருத்துகள் பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு எதிரானவை என்றும், சபாநாயகர் வகிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பதவிக்கு இது பொருத்தமற்றது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *