கேபினட் கூட்டத்தில் தர்மேந்திர பிரதான் விவகாரம் குறித்து விவாதம் இல்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

டெல்லி, ஜூலை 25-

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்து நடைபெற்றதாகக் கூறப்படும் கேபினட் ஆலோசனைகள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தர்மேந்திர பிரதானை வேறு அமைச்சகத்துக்கு மாற்றுவது குறித்து பேச்சு நடப்பதாக தகவல்கள் வெளியாகினாலும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வகையில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மாணவர்களின் முக்கிய கோரிக்கை தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து முழுமையாக நீக்குவதுதான் என்றும், வெறுமனே வேறு துறைக்கு மாற்றுவது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறினார். மேலும், நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் மற்றும் மாணவர் போராட்டங்களுக்கு மத்திய அரசு உரிய பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *