‘நோலோ’ புயல் எதிரொலி: ஹவாய் தீவில் அவசரநிலை பிரகடனம்

top-news

ஹொனலுலு: சக்திவாய்ந்த ‘நோலோ’ புயல் ஹவாய் தீவுகளை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், தீவு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய பசிபிக் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள நோலோ புயல், ஹவாயின் பிக் ஐலேண்ட் பகுதிக்கு தெற்கே நகர்ந்து வருகிறது. புயலின் தாக்கத்தால் சில பகுதிகளில் சுமார் 51 சென்டிமீட்டர் வரை அதீத மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் நேரடியாக கரையைக் கடக்காது என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் வெளிப்புற பகுதிகளின் தாக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் 16 அங்குலம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *