ஹாமில்டன், வெர்ஸ்டாப்பனுக்கு இணையான சம்பளம் பெற தகுதியானவன் நான் – லாண்டோ நோரிஸ்

top-news
FREE WEBSITE AD

லண்டன், செப். 2 –

பார்முலா 1 உலக சாம்பியனான லாண்டோ நோரிஸ், லூயிஸ் ஹாமில்டன் மற்றும் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஆகிய முன்னணி வீரர்களுக்கு இணையான சம்பளம் பெறுவதற்கு தாம் தகுதியானவர் என தெரிவித்துள்ளார்.

கடந்த பருவத்தில் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 26 வயதான பிரிட்டன் வீரர் நோரிஸ், மெக்லாரன் அணியுடனான தனது ஒப்பந்தத்தை அண்மையில் நீட்டித்துள்ளார். புதிய ஒப்பந்தத்தின் மூலம் அவர் குறைந்தபட்சம் 2030-ஆம் ஆண்டு பருவத்தின் இறுதி வரை மெக்லாரன் அணியிலேயே தொடருவார்.

புதிய ஒப்பந்தத்தின் கீழ் நோரிஸின் ஆண்டு வருமானம் சுமார் 30 மில்லியன் பவுண்டாக, அதாவது சுமார் 163.5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பார்முலா 1 போட்டிகளில் அதிக சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியலில் நோரிஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது அதிக சம்பளம் பெறும் பார்முலா 1 வீரர்களில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் லூயிஸ் ஹாமில்டன் முன்னிலையில் உள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் நோரிஸை விட அதிகம் என கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *