இந்தோனேசியா போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மற்றொரு மலேசிய விமானி கைது!

top-news

கோலாலம்பூர், செப் 9: கடந்த ஜூலை மாதம் ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றொரு விமானியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

30  வயதுக்கு மேல் இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த மலேசிய விமானி இரண்டு நாட்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் இவ்வழக்கு தொடர்பாக மலேசியாவில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாகவும் கூட்டரசு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் உசேன்  உமார் கான் தெரிவித்தார்.

முதலாவதாகக் கைது செய்யப்பட்ட விமானி பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து மாறுபட்ட வேறொரு விமான நிறுவனத்தில் இந்த இரண்டாவது விமானி பணிபுரிந்து வந்ததாக அவர் கூறினார்.

அந்தக் கடத்தல் கும்பலுக்கும் மற்ற விமானிக்கும் இடையிலான பணப் பரிமாற்றத்தில் இந்த இரண்டாவது விமானி ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாகக் கைது செய்யப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானி, 25 கிலோ எக்ஸ்டசி (ecstasy) மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெத்தாம்பெர்தமைன் (methamphetamine) ஆகியவற்றை வைத்திருந்த நிலையில் சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 11 முதல் 15 வரை புக்கிட் அமான் (Bukit Aman) அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் 39 வயதான அந்த விமானியிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, மேலும் ஆறு மலேசிய ஆண்களைக் கைது செய்ததாக செப்டம்பர் 4 அன்று போலீசார் தெரிவித்தனர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *