சூப்பர் ஸ்டார் - உலக நாயகன் இணையும் திரைப்படத்தில் மேலும் ஒரு டாப் நடிகர்!
- Muthu Kumar
- 11 Sep, 2025
லோகேஷ் கனகராஜ் ஒரு மிகப்பெரியதிட்டத்தை வைத்திருப்பது அண்மையில் அம்பலமானது. கூலி திரைப்படத்தின் வெளியிடுவதற்கு முன்பு அவர் கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் சந்தித்து ஒரு கதை கூறியிருக்கிறாராம். அது இருவருக்குமே பிடித்துப் போனதால் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் ரஜினிகாந்த் உடன் இணைவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் ரஜினிகாந்த் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில், சூர்யாவை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சூர்யா வருவார். அது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோன்று இதிலும் ஒரு காட்சி வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், திரையரங்குகள் என்ன ஆகும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



