உணவுக்கு மட்டும் ரிவ்யூ போதும் இர்பான்!.. குழந்தைக்கு வேண்டாமே!

top-news

பிரபல யூட்யூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

யூட்யூபில் உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று அங்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிட்டும் விமர்சனம் செய்தும் காணொளியாக பதிவிட்டு வருபவர் இர்ஃபான். இவருக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் ஹசீஃபா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இதனிடையே நேற்றைய தினம் இர்ஃபான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு அதனை தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடவும் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிக் மாயா பங்கேற்றிருந்தார். இந்த காணொளி மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *