உலகை ஆச்சர்யப்படுத்தும் பனி பெய்யும் பாலைவனங்கள்!
- Muthu Kumar
- 16 Feb, 2026
பாலைவனம் என்றதும் அதிகப்படியான வெப்பமும், மணல் மேடுகளும் தான் நமக்கு சட்டென ஞாபகம் வரும். ஆனால், பாலை வனத்திலும் பனிப்பொழிவுகள் ஏற்படுகின்றன.
அதாவது, உலகின் வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் அமைந்துள்ள பாலைவனங்களில் ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் பனிப்பொழிவுகள் ஏற்படுகின்றது. பனியால் மூடப்பட்ட இந்த பாலைவனங்கள் பூமியின் ஒரு ஆச்சர்யமான பக்கத்தை வெளிப்படுத்துகிறது.
பாலைவனங்களில் பனி பெய்வதற்கு முக்கிய காரணம் திடீர் வெப்பநிலை மாற்றங்களே. பல பாலைவனங்கள் கடல்களிலிருந்து தொலைவில் அமைந்திருக்கும் அல்லது உயரமான இடங்களில் அமைந்திருக்கும். அப்போது சூரிய அஸ்தமனத்தின் போது வெப்பம் விரைவாக வெளியேறும். அந்த நேரத்தில் குளிரான காற்று கடந்து சென்றால் மற்றும் சிறிதளவு ஈரப்பதம் இருந்தால் பனி பெய்ய ஏற்ற சூழல் உருவாகும். சஹாரா போன்ற பாலை வனங்களில் கடும் வெயில் இருந்தாலும் கோபி ( (மங்கோலியா & வட சீனா) போன்ற பாலை வனங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது.
கோபி பாலைவனம் மிகப் பெரிய குளிர் பாலைவனமாகும். இங்கு கோடைக்காலத்தில் அதிக வெப்பமும் குளிர் காலத்தில் அதிக குளிரும் நிலவுகிறது. இந்த பாலைவனம் கடலிருந்து தொலைவில் இருப்பதால் சைபீரியாவிலிருந்து வரும் குளிர் காற்று தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால், குளிர் காலத்தில் பனிப் பொழிவு ஏற்படுகிறது. இந்த பாலைவனத்தை சுற்றி பார்க்க மே - செப்டம்பர் சிறந்த மாதமாகும்.
கிரேட் பேசின் பாலைவனம் (அமெரிக்கா)
உயரமான நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பாலைவனம், கடினமான மலைகள் மற்றும் உலர்ந்த பள்ளத்தாக்குகளால் நிரம்பியுள்ளது. பேசின் அண்ட் ரேஞ்ச் (Basin-and-range) எனப்படும் தனித்துவமான புவியியல் அமைப்பு காரணமாக குளிர்காலத்தில் இங்கு அடிக்கடி பனி பெய்யும். இங்கு நீங்கள் ட்ரிப் செல்ல விரும்பினால் ஏப்ரல் - ஜூன் அல்லது செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் செல்லலாம்.
சஹாரா பாலைவனம் (வட ஆப்பிரிக்கா)
உலகின் வெப்பம் அதிகமான பாலைவனம் சஹாரா தான். தங்க நிற மணல் மேடுகள் மற்றும் கடும் வெப்ப நிலைக்கு இது பிரபலமானது. ஆனால் வட சஹாரா பகுதிகள் குறிப்பாக மலைப்பகுதிகள் அருகே உள்ள இடங்கள் சில நேரங்களில் குளிர்ச்சியாக மாறும். நவம்பர் - பிப்ரவரி சுற்றுலா செல்ல சிறந்த மாதமாகும். இதேபோன்று, அர்ஜெண்டினாவில் உள்ள பட்டகோனியன் பாலைவனம், சிலியில் உள்ள அடகாமா பாலைவனம் உட்பட பல பாலைவனங்களில் பனிப்பொழிவு ஏற்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



