அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்தோணி லோக்
- Shan Siva
- 11 Nov, 2026
கோலாலம்பூர், நவ 11: மலேசியப் போக்குவரத்து அமைச்சரும், ஜனநாயகச் செயல் கட்சியின் பொதுச் செயலாளருமான அந்தோணி லோக், தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து நவம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை தாம் பகிரங்கமாகத் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் அமைச்சரவையில் பணியாற்றத் தமக்கு வாய்ப்பளித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
அமைச்சின் பொறுப்புகள் மற்றும் தற்போதைய திட்டங்கள் தடையின்றித் தொடர்ந்து செயல்படுவதற்கு, புதிய அமைச்சரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பணியில் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

