அமைச்சர் பதவியிலிருந்து அந்தோணிலோக் ராஜினாமா!
- Shan Siva
- 20 Sep, 2026
கோலாலம்பூர், செப் 20: முன்னாள் பிரதமர் நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளதாக DAP பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக் (Loke Siew Fook)தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, DAP தலைவர்களில் தான் மட்டுமே இப்பதவி விலகல் முடிவை மேற்கொண்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் லோக் தெரிவித்தார்.
தங்கள் அரசியல் லட்சியங்களை அடைவதற்காக, DAP ஒட்டுமொத்தமாக அமைச்சரவையிலிருந்து வெளியேற வேண்டும் என்று சில தரப்பினர் விரும்புவதை தமது கடஜ் நன்கு அறிந்துள்ளது என்றும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

